பக்கம்:கவிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வறுமையைப் பிறர்க்குத் தந்து,
வளனெலாம் நமக்குத் தந்து,
சிறுமையைத் தீர்த்துத் தெய்வம்
சிறந்திடச் செய்த தின்னும்
மறுமையும் நல்கு மென்றே
மகிழ்ந்துகொண் டாடச் செல்லும்
திறமையர்க் கென்றும் தீராத்
தேவையித் திருக்கோ வில்கள்.

பணம் மட்டும் பெற்றுக் கொண்டு
பாவத்தைத் தீர்க்கும் நல்ல
குணம்மட்டும் கொண்ட தெய்வம்
குளக்கரைத் தெய்வ மென்று
மணிமட்டும் அடித்துக் கொண்டே
மனிதருக் கெடுத்துக் கூறும்
பணிமட்டும் புரிவா யாயின்
பணம்கொட்டிக் கிடக்கும் நந்தா!

தாயேனும், தந்தை யேனும்,
தமரேனும் தவிக்க விட்டு
நோயேனும் நோக்கா டேனும்
நொய்தினில் பற்ற நொந்து,
சேயேனும் தாயே னுந்தான்
செத்தொழி யாமல் காக்க
நீயேனும் நானே னும்இந்
நெறிபற்றல் நேரும், என்றன்.

23