பக்கம்:கவிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

          சாந்தி, கவிஞனை எதிர்நோக்கல்
          காலையில் எழுந்து சென்ற
          கவிஞரும் திரும்பக் காணுேம்;
          நாலையும் அறிந்த என்றன்
          நாயகன் அவரைத் தேடும்
          வேலையில் முனைந்தார்; எல்லாம்
          வேதனை யாயிற் றென்றே,
          சாலையில் விழியை வைத்துச்
          சாந்தியும் நின்றாள் இல்முன்.

          நந்தன், சாந்தியின் நிலையைக் காணுதல்
          மாந்தளிர் மேனி ஒக்கும்;
          மதிமுக மொக்கும்; மங்குல்
          கூந்தலை ஒக்கும்; நீலம்
          கூர்விழி ஒக்கு மேனும்,
          ஏந்திய கொங்கைக் கொப்பும்
          இடைக்கொப்பும் இன்னென் றில்லாச்
          சாந்தியின் நிலையைக் கண்டு
          சஞ்சல முற்றான் நந்தன்.

          சாந்தி, நிகழ்ந்ததை வினவுதல்
          நகையொன்றில் லாத நங்கை
          நறுமணங் கமழும் முல்லை
          முகையொன்றி முகிழ்த்த போலும்
          முறுவல்பூத் துவகை எய்தி,
          "பகையொன்று மின்றி யெம்மைப்
          பகல்துன்ப முறுத்திற் றின்று;
          வகையொன்று மின்றி நன்றாய்
          வருக்தினோம் நாங்கள்,” என்றாள்.

27