பக்கம்:கவிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

          கவியுறு செல்வ மெல்லாம்
          கவினுறக் கண்டார்; கற்கச்
          செவியுறு செல்வ மெல்லாம்
          செம்மையாய்ச் செய்து தந்தார்;
          புவியுறு செல்வ மான
          பொருளின்று வேண்டு மென்று,
          சவியுறத் தெளிக்தோய்! இன்றுன்
          சம்மதம் எதிர்பார்க் கின்றரர்.

          'சாதலே கேர்ந்த போதும்
          சான்றவர் வந்து கேட்டால்
          ஈதலே நேர்மை’ என்போர்
          ஈன்றனர் உன்னை! நீயும்
          ஒதலே நேர்ந்தாய்; இன்னும்
          உறுவதை உணர்ந்து நன்மை
          ஆதலே நேர, மேலே
          ஆவன செய்வாய்” என்றான்.

          சாந்தியின் பணிந்த மொழி
          நந்தனிவ் வாறு கூற
          நல்லதென் றமர்ந்து, நன்றாய்ச்
          சிந்தனை செய்த பின்னர்
          சிரித்தவள் வினவ லானாள்:
          “விந்தைதான் எல்லாம்; நீங்கள்
          விட்டுக்குத் தலைவர்; இன்று
          சொந்தத்தா ரத்தை யேனோ
          சோதனை செய்வ” தென்றே.

29