பக்கம்:கவிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

          நந்தன், காரணம் கூறல்
          “ஐந்தல்ல, பத்தும் அல்ல.
          ஐம்பதும், நூறும் அல்ல;
          சொந்தத்தில் தொழிலொன் றின்றிச்
          சொத்துள்ளோர்க் காயு ழைத்து,
          நொந்துவந் தோர்கட் கெல்லாம்
          நோய்தீர்த்துச் வாழச் செய்ய-
          சிந்தித்துச் செப்பாய்,- அன்பே!
          சிலலட்சம் செலவி” தென்றான்.

          “'கோடியே எனினும் கொண்ட
          கொள்கைக்குப் பெரிதன்' றென்று
          பாடிய கவிஞர் தம்மைப்
          பக்கத்தில் வைத்துக் கொண்டு,
          நாடியே நன்மை தீமை
          நாம்பேசக் கூட வேண்டாம்;
          கூடுமேல் உள்ள தெல்லாம்
          கொடுப்பதே பெருமை யாகும்.

          அடுப்பதை அறிந்து கூறும்
          அறிஞர்கை தாழ வேநாம்
          கொடுப்பது கூடக் குற்றம்;
          குறித்ததைக் குறுக்கீ டின்றி
          எடுப்பதற் கேற்ப, நல்ல
          ஏற்பாடு செயல்மே” லென்று
          படிப்பதை யெல்லாம் ஆய்ந்து
          படித்தவள் பகரக் கேட்டார்.

30