பக்கம்:கவிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
மூன்று

          கவிஞன், மகவேந்திய ஏழைத்
          தாயின் வரவுபார்த்திருத்தல்
          கரவுதான் கொண்ட தேனும்,
          கணக்காக வந்து செல்லும்
          இரவுதான் கழிந்து, மெல்ல
          எழுந்ததும் கவிஞன் ஏங்கிப்
          பிரிவுதான் இன்றி, நேற்றும்
          பிள்ளையை ஏந்திச் சென்றாள்
          வரவுதான் பார்த்த வாறே
          வாசலில் வந்து நின்றான்.
          செம்மைசெய் கணவ னற்றாள்;
          செயலற்றாள்; செல்வ மற்றாள்;
          நிம்மதி யற்றாள்; வாழ்வில்
          நிலையற்றாள்; நேர்வ ரென்ற
          தம்மவர் தயவும் அற்றாள்:
          தானும் தன் மகவு மாக
          விம்மலை யுற்றுக் கூலி
          வேலைக்குச் செல்ல லுற்றாள்.

33