பக்கம்:கவிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

          நந்தன் வருகையும்
          அவளுக்கு ஆறுதல் கூறலும்
          தேசம்தன் சொந்த வீடு;
          தீனர்திக் கற்றோ ரேதன்
          பாசத்துக் குரிய மக்கள்;
          பரிவுகொண் டிடையீ டின்றிப்
          பேசிப்பே ணுவதே என்றும்
          பெருங்கடன் என்போன், இன்று
          வாசலில் யாரை யோதான்
          வரவழைப் பதனைக் கேட்டான்.

          வந்தவர் தம்மைக் காண
          வாசலில் வந்து நின்ற
          நந்தனைக் கண்டந் நங்கை
          நாணினள் தலையைத் தாழ்த்த,
          முந்தியே நந்தன் சொன்னான்:
          “முகவாட்டம் தவிர்ப்பா யம்மா!
          இந்தவீ டின்று தொட்டே
          ஏழைகட் குரிய தாகும்!

          குழந்தையும் நீயும் இங்கு
          கொஞ்சநாள் வரையும் தங்கி,
          வழிந்திடும் கண்ணீர் முற்றும்
          வற்றிய பின்,வாழ் வில்முன்
          இழந்தவுன் நலத்தை மீண்டும்
          எய்திடச் செய்வே” மென்று
          மொழிந்தனன். “தெய்வம் இன்று
          முறைசெய்த” தென்றாள், நங்கை!

35