பக்கம்:கவிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

          சாந்தி அவளை உபசரித்தல்
          கணவனும் கவிஞ னும்தான்
          கரைசேர்த்து விட்ட பெண்ணைக்
          குணவதி யான சாந்தி
          குறைநிறை வாக்க வந்து,
          துணிவுதன் செயலில் தோன்றத்
          தூய்மையும் முகத்தில் தோன்ற
          அணவிநின் றவள்கை பற்றி
          அழைத்தகத் துக்குள் சென்றாள்.

          தன்னேரில் லாத சாந்தி
          தலையாய பணியாய் முந்தி,
          வென்னீரில் குளிக்கச் சொல்லி
          வேண்டுவ விரைந்து தந்து,
          நன்னீர உடைகள் நல்கி
          நகைமுக மாக்கி நக்குப்
          "பொன்னீர ரானீர், உன்றன்
          புதல்வனும் நீயும்,” என்றாள்.

          துன்பநீக்கமும் இன்பஆக்கமும்
          கடும்பாலை நிலத்தில் வாழ்ந்தோர்
          காவிரிக் கரையைக் காணின்,
          இடும்பைதா மனைத்தும் நீங்கி
          இன்புறல் இயல்பா மாறே,
          படும்பாடும் தீர்ந்து, நெஞ்சைப்
          பற்றிய துயரும் தீர்ந்தால்,
          உடம்பாகி உள்ள மாகி
          உயர்வாதல் வியப்பா காதே!

36