பக்கம்:கவிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திடுக்கிட்டு வரலா றேதும்
தெரியாத இரண்டப் பன்கள்,
“படிக்கட்டும் தம்பி யென்று
படிப்பித்தீர்; பாகம் கூடக்
குடிக்கொட்டும் விதமாய்ப் பங்கிக்
கொடுத்துள்ளீர்! கோப தாபம்
கிடக்கட்டும்; நடந்த தென்ன?
கேட்கின்றோம், சொல்வீர்" என்றார்.

"உன் வீட்டுக் காரன் செத்தான்,
உதவுவோர் இல்லை' யென்றே
பின் வீட்டுக் கந்தன், அந்தப்
பெண்ணையிங் கழைத்து வந்தே
என் வீட்டில் வேலை செய்ய
இருத்தினான்; இன்று நந்தன்
தன் வீட்டுக் கழைத்துக் கொண்டான்;
தவறிது! தாங்கேன்," என்றான்.

நாகப்பனுக்கு அறிவுரை
“'கத்தியும் கம்பும் தூக்கிக்
கைகலந் திடுதல் என்றும்
உத்தமர்க் குரிய தன்'றென்
றுரைத்திடு வார்கள் சான்றோர்;
சித்தத்தில் வைக்க ஏலாச்
சிறியதைப் பெரிய தாக்கின்
பத்தியம் கெட்ட நோயாய்ப்
படுத்திடும் அன்றோ ? மேலும்

,

43