பக்கம்:கவிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மனம்மனம் ஒத்துக் கூடி
மகிழ்ச்சியாய் வாழ வுள்ள
கனம் தயை உண்மை ஊக்கம்
கடமைகை யறவே விட்டுச்
சினம்செருக் காசை சூது
செயல்வேறு சொல்வே றானோர்
‘இனம் இனத் துடனே' யென்ப
தென்றென்றும் மெய்தான் போலும்.

கொட்டிய தேளைப் பற்றிக்
கொடுக்கொடித் தெறியா விட்டால்,
மட்டற்ற தோல்வி யென்றே
மனம்நொந்து மறுகி னோன்தான்
குட்டியைக் கண்ட கூனல்
குரங்கென இளிக்கக் கண்டு,
கிட்டனும் அமர்ந்து நெஞ்சம்
கிளுகிளுப் புற்றுச் சொல்வான்:

“வேருக்கு வென்னீர் விட்டே
வெளியார்க்குத் தெரியா வாறிப்
பாருக்கு நலத்தைப் பண்ணும்
பயன்மரம் படவைத் தல்போல்,
தேருக்கும், முருகன் கோவில்
திருவிழா வுக்கும், 'இந்த
ஊருக்குத் தலைவர்' என்னும்
உரிமைக்கும் உலைவைப் பாராம்.

45