பக்கம்:கவிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



சிலையினில் இலையாம் தெய்வம்;
'சிவன்அரி என்ப தெல்லாம்
கலைஞனின் கைச்ச ரக்காம்;
கஞ்சியில் லாமல் சாகும்
புலேயனும், வேதம் ஒதும்
புரோகிதன் என் போன் தானும்
தலைமுக்கு வாய்கண் ணாதி
தனில்சம மானோர் தானாம்!

தொன்னெறி யெல்லாம் மெல்லத்
தொடர்ந்தினித் தொலையு மாறே
தன்னுணர் வின்றி அந்தத்
தலைக்கனம் ஏறி னோனும்,
சின்னவர் பெரியோ ரெல்லாம்
சேர்ந்துநின் றிருக்கும் போதே
சொன்னதைக் கேட்டேன், நெஞ்சில்
சுறுக்கெனத் தைத்த” தென்றான்.

46