பக்கம்:கவிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



அரும்பிடும் பருவ மென்ன?
அறுபது வயதா னோரும்
விரும்பிடும் வெல்லம் காய்ச்ச
விளைந்து வெட் டிக்கொ ணர்ந்த
கரும்படும் ஆலை, தோட்டம்,
காடென அனைத்தும் சுற்றித்
திரும்பிடும் போது தன்னைத்
தேடியே மூவர் வந்தார்.

தன்னைத் தேடிவந்த மூவரை
யாரென வினவுதல்

கற்றையங் கதிரோன் மெல்லக்
காயினும், கழனி காடு
சுற்றிய தாலே கொஞ்சம்
சோர்ந்தவ னாகி நந்தன்
நெற்றியில் வியர்வை பூப்ப
நின்றவன் உற்று நோக்கி,
“முற்றிலும் புதியீர் என்னோ
முன்னிட்டு வந்த" தென்றான்.

மூவர், வந்த காரியத்தை மொழிதல்
"பல்லடத் திற்குத் தெற்கே
பாதிரிப் புத்தூர், சால
நல்லிட மெனினும், ஐயா!
நான்கைந்து வருட மாகப்
புல்லொடு பூண்டும் காயப்
பொய்த்தது வானம்; இன்றெம்
இல்லிட மெல்லாம் ஏதும்
இல்லாத இடமா யிற்று.

49