பக்கம்:கவிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



நந்தன் அவர் குறைகேட்டு
மனைக்கு அழைத்துச் செல்லல்

தீச்சொலொன் றேனும் இன்றித்
தித்திக்கும் தமிழில், வங்தோர்
பாச்சலும் பதும்ப லற்றுப்
பழங்குடிப் பெருமைக் கேற்ற
பேச்சுக ளாடக் கேட்டுப்
பெரிதுளங் கனிந்த கந்தன்
முச்சினை ஆர விட்டு
முகமலர்க் தினைய சொல்வான்.

“சாலவும் மகிழ்ச்சி; நீங்கள்
சாற்றிய தனைத்தும் கேட்டால்,
சீலமுள் ளோர்கள் கண்ணீர்
சிந்துவர்; மேலும் நின்று
காலம்வீ ணாக்கல் வேண்டாம்;
கடுகாகம் மனைக்கு வாரீர்;
ஏலும்நும் குறையைத் தீர்க்க
என்னாலிங்” கெனவே, சென்றார்.

சாந்தி, விருந்தோம்புதல்
உழவினால் ஊரை வென்ற
உத்தம னோடும், வந்த
வழியினால் வருக்தி னோரை,
“வாருங்கள் ஐயா!” வென்று
விழியினால் வேலை வென்றாள்
வினயமும் பணிவு மான
மொழியினால் உலகை வெல்ல
முன்வந்து வரவை ஏற்றாள்.

51