பக்கம்:கவிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

          நொந்திங்கு வருவோர்க் கெல்லாம்
          கோய்தீர்த்து வாழச் செய்ய,
          இந்தவூர் தன்னில் 'நந்தன்'
          என்னுமோர் தெய்வந் தன்னை
          வந்ததும் இருக்கக் கண்டோம்,
          வயிறார உண்டோம்; புல்லும்
          தந்தெமை யனுப்ப வேநீர்
          தடுப்பதும் தகுமோ? என்றர்.

          நாகப்பன் கொண்ட அழுக்காறு
          ஞானந்தான் பெருகி கின்ற
          நந்தனின் செயலைக் கேட்டான்;
          வானந்தான் இடிந்த தன்றேல்,
          வையந்தான் வெடித்த தன்றேல்,
          ஈனந்தான் மலையாய் மேலே
          இடிந்தின்று வீழ்ந்த தென்றே
          மோனந்தான் முகத்தைத் தாழ்த்த
          மூடிவாய் விலகி நின்றான்.

          ஏகப்ப னாகி ஊரில்
          இதுகாறும் இருக்தான்; ஏக
          போகப்ப னாகி எல்லாம்
          பொருக்தியே துய்த்தான்; போக
          சோகப்ப னாகி யின்று
          சொல்லருக் துயரால், சோக
          நாகப்ப னாகி நிற்க
          நவின்றனன் கிட்ட கனா!

54