பக்கம்:கவிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



          "தெய்வமாம் நந்தன்' என்று
          செப்பிய சொல்தீ யாகி,
          எய்வதோர் கணேயைப் போலும்
          இதயத்தில் தைத்தெ ரிக்க
          வய்வதும் இழந்து, வேறு
          வார்த்தையும் இழந்து, மேலே
          செய்வதும் இழந்து, கூடச்
          சீவனும் இழந்த தொத்தான்.

          இதயத்தி லிருந்து வீசி
          எரிகின்ற நெருப்பை நீக்கப்
          பொதியத்தி லிருந்து வீசிப்
          புலன்மகிழ் விக்கும் தென்றல்
          மதியத்தி லிருந்து வீசி
          மனங்கவர் நிலவு மாகா;
          நிதியத்தி லிருந்து வீசி
          நீராக்கின் நீங்கும் போலும்

          'நெறுநெறு' வென்று பல்லை
          நெருக்கினான்; நிமிர்ந்து நின்று
          'வெறுவெறு வென்று பார்த்து
          விழிகளை உருட்ட லானான்;
          'கிறுகிறு' வென்று மேற்கும்
          கிழக்குமாய் நடந்த வாறே,
          'பொறுபொறு பயலே உன்னைப்
          புதைக்கிறேன் நாளைக்” கென்றான்.

55