பக்கம்:கவிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

          நாகப்பன் சிறுகாளியை அழைத்துவர ஏவுதல்
          "ஒட்டானக் கவிஞன்; நம்மை
          ஒருதுளி மதியான்; கிட்டா !
          கொட்டாவி விட்டுக் கொண்டே
          குந்தியிங் கிருக்க வேண்டாம்;
          சிட்டாகப் பறந்து செல்லச்,
          சிறுகாளி- அவனைப் பார்த்துக்
          கட்டாயம் அழைத்து வா;போ;
          கையோடெ”ன் றான் நா கப்பன்.

          இழிந்தவரின் ஆலோசனை
          திருட்டோடு பிரட்டுக் கும்கை.
          தேர்ந்தவர் மூவர் அன்று
          குருட்டோடு கூடிக் கொண்ட
          குருடராய்க் குந்திக் கொண்டே
          இருட்டோடு குசுகு சென்றங்
          கெதனையோ பேசி விட்டுப்
          பொருட்டோடு பணமும் பெற்றுப்
          போனார்கள் பொறுக்கி நாய்கள்!

          நந்தனின் தோட்டத்தில்
          வாழைக்காய் திருடிப்போதல்

          பேழைக்காய்ப் பணத்தை நாளும்
          பெருக்கலே தொழிலாய்க் கொண்டு,
          பீழைக்காய் வாழும்- கூடப்
          பிறந்தவன் தூண்ட லாலே
          'ஏழைக்காய் வாழ்வேன்' என்றே
          இருக்கின்ற நந்தன் தோட்ட
          வாழைக்காய்த் தாறில் பத்தை
          வகையாக வெட்டிச் சென்றார்.

56