பக்கம்:கவிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆட்டுக் குட்டிகளைத் திருடுதல்
கேட்டுக்கு மருந்தாய்த் தேடிக்
கேள், கிளை, சுற்றம், நட்பாய்
வீட்டுக்கு வந்தோர்க் கெல்லாம்
வேண்டுவ விரும்பித் தந்திக்
நாட்டுக்கு நலத்தைத் தேடும்
நந்தனின் சொந்த மந்தை
ஆட்டுக்குட் டிகளில் ஐந்தை
அடுத்தநாள் பிடித்துச் சென்றார்.

மாடும் கன்றும் திருடுதல்
ஒருமையாய்க் கண்டோர்க் கெல்லாம்
உள்ளத்தில் உவகை ஊறும்,
கருமையாய் மினுமி னென்று
கருத்தினைக் கவரும் மேனி,
பருமையாய் வேளைக் காறு
படிபாலைக் கறக்கும் மாடும்
அருமையாய் வளர்த்த கன்றும்
அதற்குப்பின் கவர்ந்து சென்றார்.

நந்தன் திருடர்களைப் பிடித்துவரச் செய்தல்
“முடியாமல் அல்ல இன்று
முதல் நாளெ'ன் றான்;அடுத்துப்
'படியாமல் செய்தார்; மேலும்
பார்க்கலாம்' என்றான் ; பின்பு,
' கடியாமல் இருக்க யாதும்
காரணம் இல்லை, கண்டு
பிடியாமல் இருக்கேன்,'
என்று பேசியே முடித்தான் நந்தன்.

57