பக்கம்:கவிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

          விற்பதற் கெளிய தான
          வெல்லத்தில் கையை வைக்கச்
          சிற்பம்போன் றுடல்கட் டுள்ள
          சிறுகாளி யுடனே கிட்டன்-
          பற்பலர் ஆங்காங் கன்று
          பதுங்கியே இருப்ப தோரார்
          அற்பர்கள் இரவில் வந்தார்,
          அகப்பட்டுக் கொள்ள லானார்.

          திருடர்க்குக் கவிஞன் உரைத்த நன்மொழி
          அடிஉதை எதுவும் இன்றி
          அவர்களைப் பிடித்த ஆட்கள்
          உடனடி யாக வீட்டுக்
          குட்புறம் அழைத்துச் செல்ல,
          மடமயில் சாந்தி, நந்தன்
          மகிழ்ந்திடக் கவிஞன் பார்த்து,
          “கடவுளின் கருணை! வாரீர்,
          கவலையற் றிருப்பீர் இங்கே.

          கண்ணுண்டு காணக் கேட்கக்
          காதுண்டு; கைகா லுண்டு;
          விண்ணுண்டு மழையைப் பெய்ய
          விளைவிக்கத் தகுந்த தான
          மண்ணுண்டு; மகிழ்ந்து வாழ
          மனையுண்டு; மக்க ளுண்டு;
          பெண்ணுண்டு பேணிக் காக்க!
          பெரும்பிழை செயலேன் நீங்கள்

58