பக்கம்:கவிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

          கெட்ட அச் சிறுகா ளிக்கும்
          கேள்வியே சிறிதும் அற்ற
          துட்டன் அக் கிட்ட னுக்கும்
          தோன்றாத தனைத்தும் தோன்றப்
          பட்டென உளத்தில் பாய்ந்து
          பளிச்சென ஒளிர, 'எம்மை
          விட்டது சனியன்' என்றே
          விழுந்தவர் வணங்கலானார்.

          “வணங்கவும் வேண்டாம்; எண்ணி
          வருந்தவும் வேண்டாம்; யாரும்
          பிணங்கலென் பதுதான் இன்றிப்
          பிறரையும் தமராய் ஏற்றுக்
          குணங்கொண்டு குற்றம் நீக்கிக்
          குறை தீர்ந்திக் குவல யத்தில்
          இணங்கிநாம் வாழ வேண்டும்"
          என்றனன் இறும்பூ தெய்தி!

60