பக்கம்:கவிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

          வலைக்ககப் பட்ட ஓநாய்
          வருந்திய தொக்கும்; அன்றேல்,
          அலைக்ககப் பட்ட செத்தை
          ஆகலாம்; அன்றேல் எச்சில்
          இலைக்ககப் பட்ட காற்றின்
          இழுபறி எனலாம்; துன்ப
          நிலைக்ககப் பட்டான் நெஞ்சின்
          நிலை கூற வல்லேன் அல்லேன்.

          வயலுக்குச் சென்ற நாகப்பன்
          கவிஞனைக் கண்டு உரையாடல்

          கைத்தடி தன்னைப் பற்றிக்
          கௌரவம் முகத்தில் முற்றும்
          நைத்திட, நாகப் பன் தன்
          நாயுடன் நஞ்செய்ப் பக்கம்
          வைத்தடி நடந்து மெல்ல
          வருகையில், எதிரே வார்த்தை
          தைத்திடப் பேச வல்ல
          தார்மீகக் கவிஞன் வந்தான்.

          நெருப்பொன்று நீரொன் றென்று
          நேரெதிர் நோக்கு வோன்பொய்ச்
          சிரிப்பொன்றி, நின்ற வாறே
          "செல்வதெங் கையா?” என்று
          விருப்பின்றி வணக்கம் செய்ய,
          வினயமாய்க் கவிஞன் சொன்னான்:
          “இருப்பின்றி எழுந்து லாவ
          எண்ணினேன் வந்தேன்,” என்றே.

63