பக்கம்:கவிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

          கவிஞன் தன் விருப்பத்தைத் தெரிவித்தல்
          கரப்புள்ள மனிதர் தாமும்
          காரிபா ரிகளாய் மாறிப்
          பரிப்புள்ள பொருள னைத்தும்
          பலருக்கும் பங்கித் தந்து
          சிரிப்புள்ள மனித ராகிச்
          சேர்ந்துசீ ராக வாழின்
          இருப்புள்ள மனித னாய்நான்
          இதயமும் களிப்பேன்," என்றான்

          நாகப்பன் சஞ்சலம்
          சிந்தித்து மறுத்துச் செப்பச்
          செப்பொன்றும் இல்லான் ஆகி,
          'இந்தத்தத் துவங்கள் ஒன்றும்
          எனக்குடன் பாடின்' றென்னா
          நிந்தித்து, நொந்த உள்ளம்
          நிலைகுலைந் “தையா! உம்மைச்
          சந்தித்த பொழுதில் எல்லாம்
          சஞ்சலம் மிஞ்சிற்" றென்றான்.

          கவிஞன் மாற்றுக்குறையாத் தங்கம்
          “எங்குந்தான் சுற்றி நானும்
          இதுகாறும் திரிந்தேன்; செல்வர்
          பங்கந்தான் படுத்தி என்னைப்
          பதைத்திடச் செய்தா ரேனும்,
          மங்குந்தான் எனினும் முற்றும்
          மாற்றும் தன் மதிப்பும் அற்றுத்
          தங்கந்தா மிரமாய் மாறல்
          தனக்கியல் பாகா" தென்றான்

67