பக்கம்:கவிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

          இனிக்கின்ற இளநீர் ஏந்தி
          இயல்படச் சீவி வெட்டித்
          தனக்கென்று தந்த தைத்தான்
          தன்கையில் வாங்கான் ஆகி,
          கனக்கின்ற மேனி காய்ந்து
          கதியற்ற முதியோள் சுட்டி,
          "உனக்கிது தாயே வா,வந்
          துறிஞ்சிநீ குடிப்பாய்," என்றான்.

          கண்ட அப் பெண்டிர் எல்லாம்
          கைகூப்பிக் கண்ணீர் கோக்க
          மண்டலம் தன்னில் எந்த
          மனிதனும் இதுநாள் காறும்
          விண்டதும் கூட இல்லா
          வினயத்தின் விதத்தை ஓர்ந்து
          கொண்டதும், “ஐயா! நீர் இக்
          குவலயத் தெய்வம்!" என்றார்.

          ஆளொன்றங் கிளநீர் ஒன்றாய்
          அனைவரும் பருகப் பின்னர்,
          வேளொன்று சின்னப் பன்தான்
          வெகுவாக விரும்பி வேண்ட,
          “நாளொன்று நலமா யிற்று;
          நான்களி கூர்ந்தேன்; நன்று,
          கேளெ”ன்று சொல்வான்
          நாட்டின் கேட்டினைத் தீர்க்க வந்தோன்.

70