பக்கம்:கவிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



எழுப்பிய கோவி லாலும்
இயற்றிய பூசை யாலும்
இழப்பன்றி இதுநாள் காறும்
இம்மியும் பயன்தான் இல்லை;
பழிப்பின்றி இனிமே லேனும்
பாரதம் செழிக்க வேண்டின்
உழைப்பன்றி, உழைப்போ ரன்றி
உதவியொன் றிலைவே" றென்றான்.

வழுக்கையைத் தின்ற வாறிவ்
வார்த்தையைக் கேட்ட மக்கள்,
ஒழுக்கிய கண்ணி ரோடும்
உயிர்தழைப் புற்றே ராகி
இழுக்கிய நிலையை விட்டே
இயல்நிலை கண்டோர் போல
முழக்கினார் : "கவிஞ னுக்கெம்
முறைநாட்கள் ஆக" வென்றே.

74