பக்கம்:கவிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



ஆறு

நந்தனின் ஒப்புரவால் தீயோரும் நல்லோராதல்

உடையழுக் காயிற் றென்றல்
உபயோகம் அற்றுப் போமோ?
மடைவாயில் நனைத்துக் கல்மேல்
மனம் வைத்துத் துவைத்தால், மற்றும்
தடையின்றி அதுவே நன்கு
தரிப்பதற் குரித்தா மாறு
கடையரும் நல்லோர் ஆகிக்
கடைத்தேறக் கூடும் அன்றோ?

பிறந்தநாள் தொட்டுத் தீய
பேசுதல் செய்தல் அன்றி
மறந்துமோர் நன்மை செய்யா
மறச்சிறு காளி, கிட்டான்,
சிறந்தவர் தம்மைச் சேர்ந்து
சிலநாட்கள் இருக்க வேதான்
துறந்தவர் எனவே முற்றும்
தோற்றத்தில் வேறா னார்கள்.

75