பக்கம்:கவிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



கிட்டனின் விருப்பமறிந்து கறவை
வாங்கப் பணம் ஈதல்


"சிறுமைகள் செய்து கெட்டுச்
சீரழி யாமல் முன்போல்,
வறுமையின் றினிமேல் நீயும்
வையத்தில் வாழ வேண்டும்;
பொறுமையாய்ச் சிந்தித் தின்று
புகலுவாய் கிட்டா! எந்தத்
திறமையில் டொருளைத் தேடித்
திகழ்ந்திட விருப்பம்," என்றான்.

உறுவதைச் சால நன்றாய்
யோசித்துச் சொன்னான் கிட்டன்:
'மறுவெதும் இன்றி நல்ல
மனிதனாய் இனிநான் வாழ்வேன்.
பெறுவதொன் றுளதேல் நாளும்
பேணிநான் வளர்க்கத் தக்க
கறவைகள் சிலகி டைத்தால்
கடைத்தேறி விடுவேன்," என்றே

கிட்டனின் மொழிகள் கேட்டுக்
கிளர்ந்துளம் கனிந்த ந்ந்தன்,
"திட்டமும் சரிதான்; முன்பே
தேர்ச்சியுண் டிதில்உ னக்கும்.
பட்டவர்த் தனமாய்ச் சொன்னால்,
பயன் மட்டும் உனக்குச் சொந்தம்;
மட்டற்ற இனப்பெ ருக்கம்
மக்கட்குப் பொதுச்சொத்" தென்றான்.

77