பக்கம்:கவிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



முகம்மிக மலர்ந்து முந்தி
முறுவலைக் கவிஞன் சிந்த,
அகம் மிக மகிழ்ந்து சாந்தி
'அழகிய ஏற்பா டெ'ன்ன,
'தகும்மிக' என்று வந்த
தங்கைஅத் துளசி கூற,
'மிகம்மிக நன்றி' தென்று
மெய்மறந் தார்த்தான் காளி!

"நாலாயி ரம்ரூ பாயில்
நனிநல்ல கறவை நான்கு
பாலாறு படிக்குக் கம்மி
ஆகாமல் பார்த்து வாங்க
ஏலாதோ?" எனவே நந்தன்,
"இதுபோதும்," என்றான் கிட்டன்.
சாலாதேல் தருவேன்," என்று
தந்தனன் தனத்தை எண்ணி.

கிட்டன், நந்தனைத் தெய்வமென வணங்கி
விடைபெறல்

'நந்தனென் றொருதெய் வத்தை
நாங்களிவ் வூரில் இன்று
வந்ததும் கண்டோம் என்று
வண்டிப்புல் கொண்டு சென்றோர்
விந்தையாய் அன்று வாயால்
விளம்பிய சொற்கள் இன்று
சிந்தையில் உதிக்கக் கிட்டன்,
'சிவன் இந்த நந்தன்' என்றே,

78