பக்கம்:கவிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



'கற்றநம் கவிஞர் கோமான்
காட்டிய கருனை யால்நான்
குற்றமும் குறையும் என்று
கூறுதற் குள்ள மாசு
முற்றிலும் அற்றேன்; இன்று
முழுமையாய் மனிதன் ஆனேன்.
மற்றினிச் செய்வ துங்கள்
மதிவழி நடப்ப" தென்றான்.

"பெண்ணென ஆணெ னத்தான்
பிறந்தவர் எல்லாம் இங்கே
உண்ணுவ துடுப்ப தோர்வ
துறைவதென் றனைத்தும் பெற்றுக்
கண்ணியம் துலங்கக் கூடிக்
கடவுளைக் கருத்தில் வைத்திம்
மண்ணினில் வாழ்தல் எங்கள்
மதிவழி," என்றான், நந்தன்.

"ஆவோடு கிட்டன் வாழ்தற்
ககமகிழ்க் தேகக் கண்டும்,
பூவோடு நாராய் நானும்
பொருந்திநன் கிருந்திங் குள்ள
தேவோடு சேவை செய்யத்
திருவுளம் பற்ற என்றன்
நாவோடிற் றையா! ஊர்ந்த
நசையினால்" என்றான், காளி!

80