பக்கம்:கவிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பேயாவான் போலும் வாட்டும்
பிரபுவின் முகத்தைக் காணின்
தீயாவான்; தெருவில் கின்று
திக்கற்றுத் திகைப்போர்க் கெல்லாம்
தாயாவான்; தக்கோர் துன்பம்
தானுறின் தகைமை சான்ற
மாயாவான் அமிழ்த மாவான்
மாபெரும் கவிஞ னானான்!


ஏழைத் தாயைக் காணல்

பழந்துணி விரித்து நன்றாய்ப்
படுக்குமுன் வந்து கண்ணில்
அழுந்திய முழுத்தூக் கத்தை
அரைகுறை யாகத் துங்கி
எழுந்ததும் கஞ்சி காய்ச்சி
எடுத்துக்கொண் டிடுப்பில் கைந்த
குழந்தையை இடுக்கித் தாய்தான்
குளிரினில் கடக்கக் கண்டே!


உலக இயற்கையை எண்ணி இரங்கல்\

உருகிற்றுக் கவிஞ னுள்ளம்
உழைப்பவள் உலர்ச்சி கண்டு;
கருகிற்று முகமும்; கண்கள்
கலங்கியே தாரை யாய்நீர்
பெருகிற்று; 'பெரியோ ரெல்லாம்
பெருமையாய்ப் பேணிக் காத்த
தருகிற்று கொல்லோ நாட்டில்
அறம்பொருள் இன்பம், என்றான்.

7