பக்கம்:கவிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



          உருப்படி நாற்ப துண்டேல்
          ஒருமந்தை சரியாய்ப் போகும்.
          விருப்பொடு செய்க! கூடும்
          விலையிரண் டாயி ரம்தான்
          தரப்படும்; பெற்றுக் கொள்நீ!
          தனிக்கிடாய்க் குட்டி யோடும்
          எருப்படும் வரவு னக்கே:
          இருப்பவை பொதுச்சொத்' தென்றான்.

          பாத்திரம் அறிந்தீ யென்று
          பாட்டிதான் பகர்ந்த சொல்போய்த்
          தோத்திரம் செய்வோ ருக்குத்
          தொலையட்டும்’ என்றீ வோர்கள்
          நேத்திரம் கொண்டு நந்தன்
          நிலையினை நேரில் கண்டால்
          மாத்திரம் நம்பி நாணி
          மனம்நொந்து மடிவார் போலும்.

          வாழ்வுக்கு வாழ்வு தந்து
          வாழ்விக்கும் வழக்கம் மாறி
          வீழ்வுக்கு வழியுண் டாக்கும்
          வீணர்க்குச் செல்வம் கல்கி,
          தாழ்வுக்குள் ளான தேசம்
          தழைத்திடச் செய்ய வேண்டின்,
          ஊழ்விக்கும் ஊழுக் கூழாம்
          உழைப்பினுக் குதவ லேயாம்.

82