பக்கம்:கவிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



          உய்முறை உலகம் காண
          ஒருவனாய்த் துணிந்து நந்தன்
          பொய்முறை தவிர்த்த உண்மைப்
          புலவன் வாய்ச் சொல்லை ஒர்ந்து
          மெய்முறை அறிந்து சொந்த
          மேதினி நலத்திற் காகச்
          செய்முறை செய்தான், சேர்த்த
          செல்வத்தின் பயனா மாறே.

          'தன்னலம் ஒன்றே பேனும்
          தரங்குன்றி னோர்கள் போக்கால்,
          மன்னலம் குனறும்; மககள்
          மதிநலம் குன்றும்; வாழும்
          இன்னலம் குன்றும்; எங்கும்
          எழில்நலம் குன்றும்; வாயில்
          சொன்னலம் குன்றும்; குன்றும்
          சுகம்சுத்தம் , எனலாம், அன்றோ?

          துளசிக்கு யாது வகை செய்தல் என
          நந்தன் எண்ணுதல்
          சிறுகாளி சோலி தீர்ந்து
          சென்றதும், நின்ற நந்தன்
          உறுகேளாய் உற்ற தங்கை,
          உலகில்வே றுதவி அற்றாள்,
          மறுகாளாய் வாழ்தற் கென்ன
          மார்க்கந்தான் செய்வ தென்று,
          பெறுகோளொன் றின்றி எண்ணிப்
          பெருமூச்சு விடுவோன் ஆனான்.

83