பக்கம்:கவிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



          சாந்தியின் உவகைப் பெருமிதம்
          காந்தனின் மொழியைக் கேட்டுக்
          களிப்புற்ருள் முன்பு; பின்பிம்
          மாந்தரில் தெய்வ மானேன்
          மலர்ந்தவாய் மொழியைக் கேட்டு,
          சாக்திமெய்ப் புளகம் போர்த்துச்
          "சரியிது மிகவும்; ஆனால்,
          ஈக்திட எனது பங்குக்
          கில்லைவே றெதுவும்,' என்றாள்.

          துளசியின் பணிவும் பண்பும்
          கூர்ந்திதைத் துளசி கேட்டுக்
          கும்பியும் குளிர்ந்தாள் ஆகி,
          "தீர்ந்ததென் துயர மேனும்
          திருவடி படிந்த துள்ளைப்
          பேர்ந்துநான் வேண்டு கின்றேன்
          பெருமாட்டி!" என்று கண்ணிர்
          ஊர்ந்திட வணங்க, முற்றும்
          ஒவ்வா.தென் றுவந்தாள் சாந்தி!

88