பக்கம்:கவிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



ஏழு


          தாழ்ந்தவர் உயர்வு
          மற்றும் அவ் வூரி லுள்ளோர்
          மறுகதை கட்டிப் பேச,
          முற்றிலும் வறுமை மூடி
          மொத்தமாய்க் கெட்ட மூவர்
          கற்றவர் காட்டி இட்ட
          கருனையின் பெருக்கால்,
          உற்ற சுற்றமும் கட்பும் சூழச்
          சுகமாக வாழ்வோ ரானார்!

          நாகப்பனின் பழி யெண்ணமும்
          பொன்னனோடு சூழ்தலும்

          கண்டாநா கப்பன் மட்டும்
          கருத்தொடு களையும் அற்றுப்
          பெண்டொடும் பிள்ளை யோடும்
          பேசாது பெரிதும் கோணி,
          'மண்டை தான் பெருத்த அந்த
          மனிதனே மாய்க்கா விட்டால்
          உண்டநீர் செரியா' தென்றே
          உன்மத்தன் ஆனன், ஊரில்.

89