பக்கம்:கவிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நேற்றைய முன் நாள் நந்தன்
நேரில் சந்தித்து, 'யாதும்
வேற்றுமை வேண்டாம் பொன்னா!
வெறும்புல்லைத் தங்க மாக
மாற்றும்செம் மறியா டீவேன்
மறுக்காமல் மேய்ப்பாய்,' என்றே
சாற்றிய மொழிகள் என்னைச்
சாதுவ ய்த தண்ணா!

நேர்மாறி நிலையும் மாறி
நெஞ்சுநொந் தோர்கள், இன்று
பேர்மாறிப் பெருவாழ் வெய்திப்
பெரிதுவந் திருந்து வாழ-
ஊர்மாறி வருவ தெல்லாம்
ஊன்றியோ சித்துப் பார்த்து
நீர்மாறித் தீர்வ தன்றி
நிலையில்லை இனிவே றொன்றும்.

குட்டியப் பனைக்கூப் பிட்டுக்
‘குன்றரு குள்ள காட்டில்
திட்டமாய்க் குழிகள் இட்டுத்
தேர்ந்தநற் சாதி யான
கட்டுமாஞ் செடிகள் நட்டுக்
காத்துவாழ்ந் திருநீ, இன்றே
வட்டியில் லாமல் ரூபாய்
வழங்குகின் றேன்நான்,' என்றான்.

93