பக்கம்:கவிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பொன்னப்பன்- என்பங் காளி,
பொன்னான தோட்டந் தன்னை
முன்னொப்பி மூன்று வட்டிக்
கடகிட்டு முழுகல் கண்டச்
சின்னப்பன் வாய்தி றந்து
செப்பவும், அப்போ தேதான்
தன்னொப்பார் இல்லா நந்தன்
தானீந்து தீர்த்து வைத்தான்.

ஒன்றல்ல, இரண்டும் அல்ல;
ஒருநூறு குடும்பங் கள்தாம்
நன்றல்ல செய்து கெட்டே
நாதியற் றலைந்து, நாளும்
சென்றெல்லை இன்றிக் கூலி
செய்துசீ வித்தோர் இன்புற்
றின்'றில்லை' என்னும் சொல்லொன்
றில்லாமல் இருந்து வாழ்வார்.

முன்னாலே கவிஞன் வந்திம்
முத்தூரில் காலை வைத்த
பின்னாலே, நந்தன் பேணிப்
பெரிதும்காத் திருந்த தாலே,
என்னாலே, உங்க ளாலே,
இந்த ஊர்க் குற்ற பீடை
தன்னாலே நீங்கிற்" றென்றான்
தார்மீக மாகப் பொன்னன்.

94