பக்கம்:கவிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாகப்பன் கொள்கை மாற்றம்
பொன்னனை அவன்வீட் டுக்குப்
போமாறு பணித்து விட்டு,
மன்னனை ஒப்ப ஊரில்
மமதையாய் மகிழ்ந்து வாழ்ந்த
முன்னினை வனைத்தும் நெஞ்சில்
மோதலை கடலாய் மாற,
'என்னினிச் செய்வ' தென்றே
எண்ணமிட் டேங்க லானான்.

எட்டினால் குடுமி; எட்டா
விடின் காலைப் பிடிப்பார் போல,
கொட்டினால் தேளாய்க் கொட்டா
விடின்பிள்ளைப் பூச்சி யாய்,வெல்
வெட்டினால் தைத்த மெத்தை
விரித்ததில் படுத்து, 'மேலும்
முட்டினால் முறிந்து கொம்பு
மோழையாய் விடும் தான்,' என்றான்.

கருவினில் அமைந்து வாய்மை
கைவரப் பெற்றோர்க் கன்றித்
திருவினில் குறைவு நீங்கித்
திகழ்பவர் எனினும் கூட,
உருவினில் மனித ராகி
உள்ளத்தில் மிருக மானோர்,
கரவினில் அன்றி வீரம்
களத்தினில் காட்டார் போலும்!

96