பக்கம்:கவிஞன், வெள்ளியங்காட்டான்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பொன்னைத்தான் மண்ணைத் தானும்
போதவே தேடி வைத்தும்,
தன்னைத்தான் நேசிக் காமல்
தரம்குன்றும் மனித ராலே
முன்னைத்தான் பின்னைத் தானும்
மூண்டது துயரம் அன்றி,
‘என்னைத்தான் பயனெ'ன் றெண்ணின்
இதயந்தான் வேகும் கண்டீர்.

நாகப்பன், கவிஞனின் வரவை எதிர்பார்த்தல்
மூக்கறுப் புண்ட போதும்
முகம்மூடி மறைத்துக் கொண்டே
ஏக்கறுத் தெப்போ தும்போல்
இயங்கிட எண்ணு வோன், தன்
தீக்கருத் தனைத்தும் விட்டுத்
திருந்தினான் போன்றோர் நாள் தான்,
போக்கறிந் திருந்தான்
நல்ல புலவனின் வருகை பார்த்தே.

இருவரும் சந்தித்தல்
ஒழுக்கத்தை ஒட்டி வாழும்
ஒண்கவிப் புலவன் காலை
வழக்கத்தை ஒட்டி வந்தான்
வாய்க்காலுக் கன்றும் , கண்டான்,
இழுக்கத்தை ஒட்டி வாழ்ந்தோன்
இணைந்துடன் செல்ல எண்ணிப்
பழக்கத்தை ஒட்டி வந்து
பணிவுடன், “வணக்கம்," என்றான்.

97