பக்கம்:கவிஞன் உள்ளம்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 கவிஞன் உள்ளம் தனது முறை வருங்கால் கபிலருக்குக் காலேயில் தான் அருகம்புல்லின் நுனியில் கண்ட பனித்துளியும் அதில் தான் கண்ட பனைமரத்தின் உருவமும் கினேவுக்கு வருகின்றன. அக்காட்சியை உவம்ையாகக்கொண்டு அப்படியே ஒரு வெண்பாவாக்குகிமுர். திணிையரிசி யளவுகூட இல்லாத ஒரு சிறிய பனித்துளியில் எவ்வாறு ஒரு பெரிய பனேயின் உருவம் காட்டும் குணம் இருக் கிறதோ அதுபோல பரந்த பொருள்கள் எல்லாம் வள்ளுவரது குறள் வெண்பாவால் ஆகிய நூலில் அடங்கி யிருக்கின்றன என்ற கருத்து வெண்பாவில் அமைந்து விடுகிறது. வெண்பா வருமாறு: " தினையளவு போதாச் சிறுபுன்னீர் நீண்ட பனையளவு கட்டும் படித்தான் - மனயளகு வள்ளைக் குறங்கும் வளநாட! வள்ளுவனர் வெள்ளைக் குறட்பா விரி ! - திருவள்ளுவமலே (கபிலர்), (தினை - மிகச்சிறிய பொருளைக் குறித்தல்: பனே . மிகப் பெரிய பொருளேக் குறித்தல்; படித்து - குணத்தை யுடையது; மணி அளகு வீட்டில் வளர்க்கப்படும் பறவைப் பேடுகள்; வள்ளே - மகளிர் பரிமளப்பொடி இடிக்கும் போது பாடும் பாட்டு; விரி - விரித்தல்.) பாவலர் தான் கூர்ந்து பார்த்த இயற்கைக் காட்சி களைப் பாவில் அமைத்த திறம் படிக்குந்தோறும் உவகையை மிகுவிக்கின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞன்_உள்ளம்.pdf/100&oldid=781484" இலிருந்து மீள்விக்கப்பட்டது