பக்கம்:கவிஞன் உள்ளம்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 கவிஞன் உள்ளம் கோலாலும், நெல்லேப் படி அல்லது மரக்காலாலும் சருக்கரையைத் தர்ாசாலும், பணத்தை எண்ணிப் பார்த்தும் அளப்பதை யாவரும் அறிவார்கள். இங்கு எந்தப் பொருள் அளக்கப்பட வேண்டுமோ அந்தப் பொருள் கேராக அளக்கப்படுகிறது. காலத்தை இங்ங்ணம் நேராக அளத்தல் முடியாது. ஞாயிறு போன்ற கோள்களின் இயக்கத்தாலும், கடிகாரம் போன்ற கருவிகளாலும் காலம் கணக்கிடப்படுகிறது. ஞாயிற்றினது இயக்கத்தால் இவ்வளவு நாழிகை ஆயிற்று என்றும், கடிகார த்தின் முட்கள் சுற்றுவதனல் இவ்வளவு மணி ஆயிற்று என்றும் கூறப்படுகிறதே யன்றிக் காலம் என்னும் அருவப் பொருள் துணி, நெல், சருக்கரை, பணம் போன்ற உருவப் பொருள்கள் அளக்கப்படுவனபோல் நேராக அளக்கப்படுவதில்லே என்பது அறியத்தக்கது. பண்டைக்காலத்தில் தமிழர்கள் காலம் ' என்ற பொருளின் சிறப்பை கன்கு அறிந்திருந்தார்கள். அதன் அளப்பரும் பெருமையை நன்குணர்ந்திருந்தார்கள். உலகியல் நடைபெறுவதற்காக நாழிகைபோன்ற கணக்குகளே வைத்துக்கொண்டிருந்தாலும், மெய்யறி வினையுடைய பெரியார்கள் காலத்தைக் கூறுபடுத்த முடியாது என்பதை கன்கு தெரிந்திருந்தனர். ஆகவே இத்தகைய காலம் என்னும் அரிய அருவப் பொரு ளுக்குத் தலைவனுக்க் காலன்' என்னும் கடவுள் இருப்பதாகக் கொண்டிருந்தனர். எல்லாவற்றிற்கும் தலைவகை உள்ள வரம்பொருளைக் காலகாலன்' என்ற பிெயரால் குறித்தனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞன்_உள்ளம்.pdf/102&oldid=781488" இலிருந்து மீள்விக்கப்பட்டது