பக்கம்:கவிஞன் உள்ளம்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிலேயற்ற வாழ்க்கை 85 சமணர்கள் தமிழுக்குச் செய்த தொண்டைப் போல எவரும் செய்ததில்லை. சிற்றின்பம், பேரின்பம் ஆகிய இருவகை இன்பங்களேயும் தர ஆற்றல் வாய்ந்த நூல்களே, படிக்கும்போதே தேனூறும் தமிழ் பாக் களால் ஆக்கியிருக்கிருர்கள். சீவகசிந்தாமுணி என்னும் நூல் இருவகை இன்பங்களையும் ஒருங்கு பயக்கும் பெற்றி வாய்ந்தது. இது போன்ற பல தமிழ் நூல்கள் சமணத்துறவிகளால் செய்யப்பட்டிருக்கின்றன. துறவி களாக விருந்தாலும், சிற்றின்பத்தை அவர்கள் கூறி யதைப்போல எவரும் கூறவில்லை என்று சொல்லலாம். சிற்றின்பத்தை மிக மேல் கிலேக்குக் கொண்டுபோய், அத்தகைய சிற்றின்பத்தின் கிலேயாமையைக் காட்டிப் பேரின்பத்தின் ஒருவந்தத்தை மனதில் பசுமரத்தாணி புோல் பதியும்படி செய்வார்கள். பின்னர்ப் பேரின்பத் தின் தன்மையை உணர்த்துவார்கள். ஆலும் வேலும் பல்லுக்குறுதி, காலும் இரண் டும் சொல்லுக்குறுதி ' என்பது நமது தமிழ் காட்டில் வழங்கிவரும் பழமொழி. உடல் கலமுறையையும் நீதியையும் போதிக்கும் இச்சொற்முெடரை உள்ளுங் தோறும் உவகை உண்டாகிறது நாலு என்பது கர்லடியாரையும், இரண்டு என்பது திருக்குறளையும் குறிக்கின்றன். காலடியார் என்பது நானூறு வெண்பாக் களால் ஆகிய ஒரு திே நூல். அவ்வெண்பாக்கள் தனித்தனியாக நானூறு சமணத்துறவிகளால் பாடப் பட்டன என்பது அறியக்கிடக்கின்றது. நாட்டுப்புறங்களில் பூசாரி மருள்கொண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞன்_உள்ளம்.pdf/103&oldid=781490" இலிருந்து மீள்விக்கப்பட்டது