பக்கம்:கவிஞன் உள்ளம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

у சங்கம் வளர்த்த தமிழ்க் கடலிலே திரண்டெழுத்த அமுத மாகிய திருக்குறள் இந்த ஆசிரியரின் இாண்டு கட்டுர்ைகளில் இடம் பெற்றிருக்கிறது. இக்கட்டுரைகள் டுேகாயகமாக அமைக் திருப்பது பொருத்த முடையது. இவ்வாசிரியர் காலடியார் . என்ற நீதிச் சுரங்கத்தையும் நினைப்பூட்டிச் செல்கின்ருர், ஆழியில் சிந்தாமணி'யையும், மணிவாசகப் பெருமானின் இரண்டு மணிகளையும் மறந்து விடவில்ல. சங்க நூல்களில் ஆரியாசனம் பெற்றிருக்கும் அரசிளங்குமரியை என்றும் குமரி யாக்கிச் சக்கரவர்த்தினியாகவும் முடிசூட்டி வைத்த கவிச் சக்கா வர்த்தியின் காவிய அரண்மனையிலே, முன் வாசற் பூஞ்சோலேயில் சாதாரணமாக மலர்ந்திருக்கும் நான்கு மலர்களைத் தம் புலமைச் திறமையால் மணம் மிக வீசக் காட்டிச் செல்கின்ருர் ஆசிரியர். திருவிளையாடற் புராணத்தையும் காஞ்சி புராணத்தை யும் நளவெண்பாவையுங்கூட மறந்துவிடாமல் மைல்கற்களாத்க் காட்டித் தமிழின் ராஜபாதை'யை நீளக்காட்டிவிடுகிருர், நமது இன்றைய புரட்சிக் கவிஞரையும் கண்டுகாட்டி, இப்படியே இன் னும் எத்தனையோ மைல்கற்கள்!” என்று உய்த்துணா வைக்கிருர்; புரட்சிகரமான மாறுதல்களிலும் பொற்சாடுபோல் சங்ககாலத் தமிழ்ப் பண்பு ஊடுருவிக் கிடக்கும் என்பதையும் சுட்டிக்காட்டு இருர். இந்த ஆசிரியரின் தமிழ் நடை காலத்திற்கு இசைந்து வளர்ந்து வரும் நடைதான். வளரும் தமிழில் மலரும் இலக்கியத் திற்கு உரியநடை. இத்தகைய நடைதான் நல்ல தமிழ்' இக்கரீலக் திற்கு, சங்கநூற் கட்டுரைகளையும் இத்தகைய வசன நடையில் எழுதினுல்தான், சாதாரண உலக இன்பம் முதல் உயர்ந்த கொள்கைகள் வாையில் அறிஞர்கள் சங்க இலக்கியங்களிலே கண்டு. களிக்கிருர்களே, அந்தக் கருத்துச் செல்வம் முழுவதும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞன்_உள்ளம்.pdf/11&oldid=781505" இலிருந்து மீள்விக்கப்பட்டது