பக்கம்:கவிஞன் உள்ளம்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 கவிஞன் உள்ளம் அதற்கடுத்தபடியாக உடன்பிறப்பன்பைக்கூறி யிருக்கலாம்: அண்ணனும் திம்பியும் போல் அன்பு காட்டி நின்றன என்று சொல்லியிருக்கலாம். அதுவும் சொல்லவில்லை. இரண்டும் ஒரே வயிற்றில் பிறக்க வில்லையாதலால் அவ்வுவமையையும் நீக்கிவிட்டார்: அதற்கும் அடுத்தபடியாக ஆசிரியனும் மாண வனும்போல’ என்ற உவமையை அமைத்திருக்கலாம். அப்படியும் கூறவில்லே. இரண்டு காளைகளும் ஒத்த பருவங்களுடையன. இவ்வுவமையைக் கொண்டால், பருவ வேறுபாடு என்ற குற்றம் நிகழும். ஆகவே, அதையும் நீக்கிவிட்டார். வெவ்வேறு இடங்களில் பிடித்து வந்த காளேகள் அன்புடன் ஒன்றுபட்டிருக்கும் கிலே வெவ்வேறு இடங் களிலிருந்தவர்கள் பெண் கொண்டதால் புதிய அன் புடன் பொருந்தியிருக்கும் கிலேதான் பொருந்தும். இவ்வாறு ஆழ்ந்த சிந்தனையுடன் அமைந்த செய்யுள் நமது உள்ளத்தைத் தொடுகின்றதன்ருே ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞன்_உள்ளம்.pdf/110&oldid=781507" இலிருந்து மீள்விக்கப்பட்டது