பக்கம்:கவிஞன் உள்ளம்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96. கவிஞன் உள்ளம் உண்டாக்கி மனத்தைக் களிப்பிப்பதுபோலவே வண்டு கள் இன்னேசையால் ரீங்கிரம்செய்து கிற்கின்றன். இந்தக் காட்சிகளை யெல்லாம் கண்டு களித்துக் கொலு வீற்றிருக்கிறது மருதத்திணை அரசு. கம்பர் தரும் காட்சியைப் பாடலில் காண்க. தண்டல மயில்க ளாடத் தாமரை விளக்கத் தாங்கக் கொண்டல்கள் முழவி னேங்கக் குவிங்கண் விழித்து நோக்கத் தென்டிரை யெழினி காட்டத் தேம்பிழி மகர யாழின் வண்டுக ளினிது பாடி மருதம் வீற் றிருக்கு மாதோ? - கம்பராமாயணம் (நாட்டுப் படலம்) தண்டலே - சோலே, கொண்டல்கள் - மேகங்கள் முழவின் மத்தளம் போல; எங்க - ஒலிக்க; தெள் திரை - தெண்டிரை, தெளிவான அகல; எழினிகாடகத் திரைச் சிலே; தேம்பிழியாழின் - இனிமை, (உள்ள தேன்(போன்ற இனிய) வீணே (ஒசை போல! செய்யுளே ஒரு முறைக்குப் பலமுறை இசை யுடன் படித்து அனுபவிக்குங்கால், காட்சிகள் யாவும் கமது மனக்கண் முன்க வந்து கிற்கின்றன அல்லவா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞன்_உள்ளம்.pdf/114&oldid=781515" இலிருந்து மீள்விக்கப்பட்டது