பக்கம்:கவிஞன் உள்ளம்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 கவிஞன் உள்ளம் இனிமையாக விருக்கும். என்ருலும், அதை கன்ருகக் காய்ச்சி, சர்க்கரைக் கட்டியாக எடுத்து உண்டால், இன்னும் அதிக இனிமையைப் பெற்றிருப்பது தெரிய வரும். பசுப்பாலும் கருப்பஞ்சாறும் மிகுதியாக நீரைக் கொண்டிருத்தலால் அவற்றின்கண்ணுள்ள சுவையும் மிகுந்து தோன்ருது குறைந்தே காணப்படுகிறது. இவற்றைப்போலவே, உரைநடையும் ஒரு எல்லேக்குட் படாமல் சொற்பெருக்கமுற்று நடைபெறுவதால், அதல்ை தெரிவிக்கப்படும் பொருள் அச்சொற்களுடன் கலந்து மெல்லிதாகி விடுகிறது. ஆனல் செய்யுள் எழுத்து, சொல், அசை, சீர், அடி முதலிய வரம்புக்குட் பட்டுச் சொற் சுருக்கமுடன் நடைபெறும்போது அதல்ை தெரிவிக்கும் பொருளும் திட்பமும் ஆழமும் உடையதாகின்றது. இவற்றை யெல்லாம் நன்கு உணர்ந்தவர்கள் பாவலர்கள். ஆகவே, அவர்கள் தங்களது கருத்துக் களே யெல்லாம் செஞ்சொற் கவிகளில் பொதிந்து வைத்திருக்கின்றனர். சங்ககாலக் கவிஞர்கள் இத்துறை யில் தலே சிறந்தவர்கள். பிற்காலத்துக் கவிஞர்களின் பாட்டுக்கள் அவ்வளிவு பொருளாழத்துடன் இல்லா விட்டாலும் கற்பனே கயம் கலந்திருப்பதால், படிப்போ ருள்ளத்தை ஈர்க்கும் ஆற்றல் பெற்றவையாக விருக் கின்றன. நாடோறும் நாம் காணும் காட்சிகளேத்தான் கவிஞர்களும் காண்கின்ருர்கள். நாம் எவ்வளவு சிந்தித்துப் பார்த்தாலும் நமக்கு மாடு மாடாகத்தான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞன்_உள்ளம்.pdf/116&oldid=781519" இலிருந்து மீள்விக்கப்பட்டது