பக்கம்:கவிஞன் உள்ளம்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேரையின் தாலாட்டு 99. தோன்றும்; ஆடு ஆடாகத்தான் தோன்றும். அவற்றி லிருந்து புதிய கருத்துக்கள் தோன்றுதலில்லை. கம்பர் போன்ற கவிஞர்கள் இக்கட்சிகளைக் கண்ணுற்ருல், அரிய கவிதைகளை உருவாக்கி விடுகிருர் கள்; அவை படிப்போருள்ளத்தைக் கொள்ளைகொள் ளும் ஆற்றல் வாய்ந்தனவாக விளங்குகின்றன. ஒரு சமயம் கம்பர் வயற்புறமாகச் செல்ல நேர்த்தது. வயலின் அருகே ஒரு குளம் இருந்தது. குளக்கரையிலும் வயல் வெளிகளிலும் அன்னங்கள் கடந்து செல்வதைக் கண்டார். தாமரை மலர்களில் அன்னக்குஞ்சுகள் இருப்பதைப் பார்த்தார். தூங்கின குஞ்சுகள் விழிப்புக்கொண்டு பசியால் வருந்திக் கீச்சிடு வதைக் கேட்டார். அதேசமயம் அக்குளத்தில் எருமை கள் வந்து படிந்திருந்தன. குளத்தருகிலும் அண்டைப் பக்கங்களிலுமிருந்த தவளைகள் கத்திக்கொண்டிருந்தன இவ்வளவுதான் அவர் கண்ட காட்சிகளும் கேட்ட ஒலிகளும். இவற்றை யெல்லாம் ஒன்று சேர்த்துத் தனது கற்பனை நயத்தைக் குழைத்து ஒரு அழகான சொற்பட ம்ாக்கித் தருகின்ருர். இம்மாதிரியாகக் கவிஞன் ஒருவன் இயற்கை நிகழ்ச்சிகளைத் தனது கற்பனை தோன்றப் பாடுவதை இலக்கண நூலார் உயர்வு நவிற்சியணி. என்று கூறுவார்கள். ' வயலில் உழத்தியர்கள் களே பறித்துக்கொண் டிருக்கிருர்கள். அவர்களைப்போல் தாமும் கடக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞன்_உள்ளம்.pdf/117&oldid=781521" இலிருந்து மீள்விக்கப்பட்டது