பக்கம்:கவிஞன் உள்ளம்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒட்டைச் செவியர் 103 பாப் பாடுவதில் தேவரையும் மிஞ்சிவிட்டார். பல இடங்களில் திருக்குறட் கருத்தை அமைத்ததோ டல்லாது, குறள் மணிகளை அப்படியே பதித்தும் வைத் திருக்கிருர். பல இடங்களில் உலக அனுபவத்தை யொடடிப் பல அணிகளே அமைத்திருக்கிமூர். காப்பியப் போக்குப் படிப்போருக்கு மெய்மறதியை உண்டாக்கு கிறது. ' விருத்தமெனும் ஒண்பாவில் உயர் கம்பன் ” என்று பிற்காலப் பாவலர்களால் பாராட்டப்பட்டிருக் கிருர். உலகியலறிவு செறிந்த அணியொன்றை எவ் வாறு அமைத்திருக்கிருர் என்பதை ஈண்டு எடுத்துக் காட்டுவாம். வேள்வி செய்யுங்கால் அரக்கர்களால் இடையூறு யாதொன்றும் விளையாதிருக்க விசுவாமித்திரர் இராம இலக்குவர்களே உதவியாகப்பெற்றுச் செல்லுகிருர். முதலாவதாக அவர்கள் தாடகையைச் சந்திக்கிருர்கள். பெண் என்று கருதாது தாடகையைக் கொலே செய்ய வேண்டுமென்று முனிவர் அறிவுறுத்துகிருர் இராமன் அரக்கிமீது அம்புமாரி பொழிகிருன். கடைசியில் இராமனம்பு ஒன்று தாடகையின் மார்பைத் துளேத்துச் செல்லுகிறது. அம்பு மார்பைத் துளேத்துச் செல்வதைப் பாவலர் உவமை ஒன்ருல் விளக்கிக் காட்டுகிருர். இது பாவலரின் உலகியலறிவையும், மக்களது தன்மையைக் கூர்ந்து ஆராயும் மதிநுட்பத்தையும் காட்டுகிறது. உவமையை எடுத்துக்காட்டும் அவரது திறமையும் இதிலிருந்து தெரியவருகிறது. இலக்கண விதிப்படி உவமையாக எடுத்துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞன்_உள்ளம்.pdf/120&oldid=781529" இலிருந்து மீள்விக்கப்பட்டது