பக்கம்:கவிஞன் உள்ளம்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

is 4 கவிஞன் உள்ளம் காட்டப்படும் பொருள் உவமிக்கப்படும் பொருளே விடப் பன்மடங்கு உயர்ந்ததாக இருத்தல் வேண்டும். அஃதாவ இ! உவமிக்கப்படும் பொருள் உவமானப் பொருளைவிடத் தாழ்ந்ததாக இருக்கவேண்டும். புலி போல் பாய்ந்தான் ' என்ற சொற்ருெடரில் புலி உவமப் பொருள்; மனிதன் உவமிக்கப்படும் பொருள். மனித னின் பாய்ச்சலைவிடப் புலியின் பாய்ச்சில் பன்மடங்கு மிகுந்தது. ஆகவே புலி பாய்கிறதுபோல் மனிதன் பாய்ந்தான் என்று சொன்னுல் அது மனிதனின் பாயுங் திறமையை மிகுதிப்படுத்திக் காட்டுகிறது. இம்மாதிரி யாக உவமை அமைதல் வேண்டும். கம்பர் இராமனது அம்பை முனிவரது சொல் லுக்கு உவமையாகக் கூறுகிருர், சொல் ஒக்கும் கடிய வேகச்சுடுசரம்' என்பது அவரது வாக்கு அரிய தவசிகள் அருள் புரிந்து சொன்னலும், வெகுளி கொண்டுக் கூறிலுைம் வாழ்வும் வீழ்வும் தவருது விளேயும் என்பது ஆன்ருேர் கொள்கை. வாய் திறந்து சொல்லுவதில் முனிவர்களுக்கு யாதொரு வருத்தமும் இல்லை. இருந்தபடி இருந்து நசவசைத்தால் போதிமானது:சொல் பிறந்துவிடுகிறது. எதிரிகள் அழிவினே அடைகிருர்கள். அதுபோலவே இராமனும் மிக எளிதாய் அம்பை விடுகிருன். அது பல வியக்கத்தக்கசெயல்களே விக்ாவிக்கிறது. தாடகை எளிதில் அழிவினே அடைகிருள். முனிவர்களது வாக்கு, இடம், காலம் இவற்றை யெல்லாம் கடக்கவல்ல ஆற்றல் வாய்ந்தது. அவர்களது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞன்_உள்ளம்.pdf/122&oldid=781533" இலிருந்து மீள்விக்கப்பட்டது