பக்கம்:கவிஞன் உள்ளம்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களை பறிக்கும் காட்சி மனிதர்கள் அடையும் இன்பங்களுள் செஞ் சொற்கவி இன்பமே தலைசிறந்தது என்பது கற்றுணர்க் தடங்கிய சான்ருேர்களின் கொள்கை, கவிதை இன்பத் தில் திளைத்த மக்கள் இந்த மண்ணுலக இன்பத்தையே மறந்துவிடுவார்கள். சீதாப்பிராட்டியை முதன் முதலாக இராமபிரான் காணும்போது அப்பிராட்டியாரின் அற் புத அழகுப் பிழம்புக்கு உவமையாகக் கவி இன்பத் தையே உரைத்துள்ளார் கம்பர். பொன்னின் சோதி யையும் பூவின் நறுமணத்தையும் தேனினது இனிய சுவையையும் வரிசையாகச் சொல்லிப் பார்த்தவர் அவை களால் நிறைவுருது கடைசியில் 'செஞ்சொற்கவி இன்பம்” என்று உணர்வொளி ததும்ப உரைத்து விருப்பம் நிறைவெய்துகின்ருர், கலையறிவில் கனிந்து விளைந்தது கவி இன்பம். மக்கள் அன்ருட வாழ்க்கையில் காணும் காட்சி களுள் உழவர்களும் உழத்தியர்களும் நெல் வயலில் களே பறிக்கும் காட்சியும் ஒன்று. நாம் பல தடவை களில் அக்காட்சியைக் கண்டாலும், அது நமது உள்ளத் தில் எவ்விதப் புதிய கருத்தினேயும் தோற்றுவிப்பதில்லை. இக்காட்சி கவிஞர் உள்ளங்களில் எவ்விதக்கருத்துக் களேத் தோற்றியிருக்கின்றது என்பதைப் பார்ப்போம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞன்_உள்ளம்.pdf/128&oldid=781545" இலிருந்து மீள்விக்கப்பட்டது