பக்கம்:கவிஞன் உள்ளம்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களை பறிக்கும் காட்சி 1 11 'களை புறிக்கச்சென்ற உழவர்கள் வயலில் உள்ள குவளே மலரைப் பார்த்து அவைகளைத் தமது காதலிகளுடைய கண்கள் என்று நினைத்துக் களையாது விட்டனர். அங்குள்ள தாமரையைத் தமது நாயகி களது முகம் என கினேந்து அதன் அருகிலும் கில்லாது அகன்று போனர்கள். அங்ங்னமே அல்வி முதலிய களை களையும் பறியாது காதற்பாட்டுக்களைப் பாடிக்கொண்டு காலம் கழித்தார்கள்; காதல் மயக்கம் அதிகமாகி அலேந்து திரிந்தார்கள் ” என்று கூறுகிருர் சிந்தாமணி ஆசிரியர் திருத்தக்கதேவர். அவர் பாட்டு வருமாறு : கண்ணெனக் குவளையும் கட்டல் ஒம்பினர் வண்ண வான் முகம் என மரையின் உட்புகார் பண்ணெழுத் தீயல்படப் பரப்பி யிட்டனர். தண்வயல் உழவர்தம் தன்மை இன்னதே. - சித்தாமணி 51. (கட்டல் - களைதல்; வான் - அழகு பொருக்கிய; மரை - தாமரை.) தேவர் போக்கினைப் பின்பற்றிய கம்பரின் உள்ளத்தை இக்காட்சி எங்ங்னம் கவர்ந்திருக்கிறது என்பதைப் பார்ப்போம். ' பல உழவர்கள் களை பறிக்கச் சென்ருர்கள்: அவர்களில் பெரும்பாலோர் இளைஞர்கள். வயலில் இறங்கிக் களை பறிக்கத்தொடங்கியபோது, அவர்களின் மனம் மாறுபட்டது. பயிர்களுக்கு இடையே கண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞன்_உள்ளம்.pdf/129&oldid=781547" இலிருந்து மீள்விக்கப்பட்டது