பக்கம்:கவிஞன் உள்ளம்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 #4 கவிஞன் உள்ளம் உலகறிந்த அனுபவத்தைப் பிணத்து வைத்திருக்கும் பெற்றி உவகை பயக்கிறது. கவிஞர் பாடல் வருமாறு:

  • கடைசியர் முகமும் காலும் கைகளும் கமலம் என்னுர்,

படைவிழி தவளை யென்னர் பவளவாய் குமுதம் என்னுt; அடையவும் களைந்தார் மள்ளர்; பகைஞரா யடுத்த எல்லே உடையவன் ஆனயாற்ருல் ஒறுப்பவர்க்கு உதவு உண்டாமோ?” - திருவிளையாடல் (திருநாட்டுச் சிறப்பு. 23 ) (கடைசியர் - உழக்தியர்; என்னுர் - கருதாமல்; படை விழி.வேல் போன்ற கண்கள் அட்ையவும்-முற்றவும்; உடையவன் - ஆண்டான், அரசன், ஒறுப்பவர்க்கு - தண்டிப்பவர்க்கு.) இம்மூவருடைய பாதைகளே கன்ருக அறிந்திருந் தாலும், தமது பாதையை மாற்றிக்கொண்டார் காஞ்சி புராண ஆசிரியர் சிவஞான முனிவர். மேற்கூறிய மூவரும். உழவர்களேக் காட்டினரேயன்றி உழத்தியர் களைக் காட்டவில்லை. ஆனல் கமது முனிவர் உழவர் களையே காட்டவில்லை; உழத்தியர்களே மட்டிலுந்தான் காட்டுகிருர், இவரது பாடல்கள் இலக்கியச் சுவைக்கே ஒரு கருவூலம் போல் இருக்கின்றன. பதினன்கு பாடல் களால் களேபறிக்கும் காட்சியை நமக்குக் காட்டுகிரு.ர். ஒவ்வொரு பாட்டும் படிப்போருக்கு மிக இன்பம் கொடுக்கவல்லதாக இருக்கின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞன்_உள்ளம்.pdf/132&oldid=781555" இலிருந்து மீள்விக்கப்பட்டது