பக்கம்:கவிஞன் உள்ளம்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 18 கவிஞன் உள்ளம் கொள்ளும் மெய்யறிஞர்களின் துறவறமும் சிறந்த வீர்மே. இவற்றை அவர்கள் அறிவாராயின் இங்ங்னம் கூருர். அகப்பொருள் இலக்கணத்தை நன்கு விளக்கு வதற்கு “இறையனர் களவியல் ” என்ற ஒரு அரிய நூல் இருக்கிறது. அது மதுரையில் எழுந்தருளியுள்ள சிவபெருமானல் பொருளுக்கு இலக்கணம் இல்லையே யென்று வருந்திய பாண்டியன் பொருட்டுச் செய்யப் பட்ட நூல் என்பது நூலறிஞர்களது கொள்கை. அங் நூலுக்கு உரைவகுத்த நக்கீரர் கருத்துப்படி உலகி லுள்ள மக்களை மூவகையாகப் பிரிக்கலாம். தலையாய மக்கள், இடையாய மக்கள், கடையாய மக்கள் எனப் படுவர் அவர்கள். முதலாவது வகையினர் இணே விழைச்சு, கோவணத்தை எலி கடிக்கிறதெனப்பூனேயை வளர்த்த சாமியார் கதைபோல, சுற்றத் தொடர்ச்சியை உண்டாக்கிக் கொலே, களவு, வெகுளி, செருக்குஎன்பன போன்ற குற்றங்களை உண்டாக்குமென்று முன்னதா கவே அச் சிற்றின்பத்தை வெறுப்பார்கள். இரண்டா வது வகையினர் பெண்என்பது என்புதோல் போர்த்த ஒரு தசைப்பிண்டம் பலவித நோய்களுக்கு இருப்பிடம்; அழுக்கு நாற்றம் நிறைந்த கூடு; அழுக்கு நாற்றம் இல்லையென்ருல் பூவும் சாந்தும் ஏனேய அணிகலன்களும் வேண்டாமல்லவா? " என்று பிறரால் உடலின் இழிவு கிலேயை அறிந்து சிற்றின்பத்தைத் துறப்பார்கள். மூன் ருவது வகையினர் எந்தவிதத்திலும் சிற்றின்பத்தை விடார். அவர்கள் பொருட்டுதான் அகப்பொருள். நூல் கள் எழுந்தன. அவர்களேயும் பேரின்பப்பாதைக்குக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞன்_உள்ளம்.pdf/136&oldid=781563" இலிருந்து மீள்விக்கப்பட்டது