பக்கம்:கவிஞன் உள்ளம்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆனந்த வெள்ளம் 121 அம்பலத்தானது அருளைப் பெற்றவர் அடையும் உலப் பிலா இன்பம்போல, அவர்கள் ஆழ்ந்துள்ள இ ன் ப வெள்ளமும் ஒரு காலத்திலும் குறையாது” என்று அறிவிக்கிருள். அதற்குச் செய்யுள்:

  • ஆனந்த வெள்ளத்து அழுந்துமேசர் ஆருயிர் ஈருருக் கொண்டு ஆனந்த வெள்ளத் திடைத் திளைத்தால் - ஒக்கும் அம்பலஞ்சேர் ஆனந்த வெள்ளத் தறை கழலோன் அருள் பெற்றவரின் ஆனந்த வெள்ளம் வற்ருது முற்ருது இவ்வணி நலமே "

- திருக்கோவையார், 307. s ஈருருக்கொண்டு - இாண்டு உருவங்களைக் கொண்டு; திளைத்தல் - அனுபவித்தல்; அம்பலம் - திருச்சிற்றம் பலம் எனவழங்கும்.சிதம்பரம்; அறைகழல்-ஒலிக்கின்ற கழல்களையுடைய வற்ருது-குறைவுபடாது; முற்ருதுமுதிராது.) -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவிஞன்_உள்ளம்.pdf/139&oldid=781569" இலிருந்து மீள்விக்கப்பட்டது